பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 10ஆம் துவக்க நாளான இன்று தமிழகத்தில் கோவை, கடையநல்லூர், அதிராம்பட்டினம் ஆகிய ஊர்களில் ஒற்றுமை அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி இன்று மாலை அதிரை வண்டிப்பேட்டையிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் அணிவகுத்து ஐடிஐ மைதானத்திற்கு சென்றனர். பின்பு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணை தலைவர் முகம்மது சேக் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் வேலுச்சாமி மற்றும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிரூதீன் மன்பஈ ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக பேரணியில் பாசிச செயல்பாடுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பட்டன. இதனை எராளமான பொதுமக்கள் கண்டுகழித்தனர்

LEAVE A REPLY