இரட்டை இலை சின்னத்தை சசிகலா தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமென, தலைமை தேர்தல் ஆணையரிடம் ஓ.பி.எஸ் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா தலைமையில் ஒரு அணியுமாக அதிமுக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பன்னீர்செல்வம் உட்பட அவரது அணியில் உள்ளவர்கள், சசிகலா தரப்பால் கட்சி பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்த நீக்கம் செல்லாது என பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வரும் நிலையில்,  அதிமுக எம்.பி மைத்ரேயன் தலைமையிலான குழுவினர், இன்று தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதியை சந்தித்தனர்.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்தது கட்சி விதிப்படி செல்லாது என அவர்கள் தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், இரட்டை இலை சின்னத்தை சசிகலா தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமென்றும் ஓ.பி.எஸ்.தரப்பினர் கோரிக்கை வைத்ததாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY