அதிரையில் நேற்றிரவு இருவேறு இடங்களில் திருட்டு சம்பவம் நடைப்பெற்றுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவை
சேர்ந்தவர்கள் அபூபக்கர் முஹம்மது சாலிகு. இவர்கள் இருவரும்
செக்கடிமேடு பகுதியில் ரெடிமேட் ஆடை கடை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின்
பூட்டுகள் உடைக்கப்பட்டு முன்பக்க கதவு திறந்துகிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதேபோல் ஆலடித்தெருவில் பூட்டிக்கிடந்த ஒரு வீட்டில் 40 இஞ்ச் எல்.இ.டி டிவி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

 

1 COMMENT

LEAVE A REPLY