அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியேற்ற கொள்கைகளைக் கண்டித்து நியூயார்க்கில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 

அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல்களைத் தடுக்கும் நடவடிக்கை என்ற பெயரில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் குடியேற்ற விதிகளில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டார்.

இதன்படி இஸ்லாமியர்கள் பெரும்பாலாக வசிக்கும் ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட 7 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அகதிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

மேலும் இந்நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்களுக்கு விசா வழங்கவும் தடை விதிக்கப்பட்டது. ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுதும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

நியூயார்க்கில் உள்ள லோயர் மான்ஹாட்டன் அருகே கூடிய போராட்டக்காரர்கள், ட்ரம்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர். அங்குள்ள குடியேற்ற அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிடச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த உத்தரவு தனிப்பட்ட மனிதர்களின் விருப்பங்களுக்கு எதிரானது என போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY