கோப்புகாட்சி .

பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியாவின் 10ஆண்டு துவக்க விழாவையொட்டி தமிழகத்தின் முக்கிய இடங்களில் ஒற்றுமை பேரணி நடத்த உள்ளதாக அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா எனும் அமைப்பு பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகிறது, தேசிய அளவிலான அந்த அமைப்பின் பத்தாம் ஆண்டு விழாவையொட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வருகிற பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி ஒற்றுமை பேரணி நடைபெற உள்ளதாகவும், அதன்படி தமிழகத்தில் கடையநல்லூர், அதிராம்பட்டினம், கோவை ஆகிய மூன்று இடங்களில் ஒற்றுமை பேரணி நடக்க உள்ளதாக செய்தியாளர்களை சந்தித்த அவ்வமைப்பின் தமிழக தலைவர் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் பொழுது பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியாவின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY