வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாமகா நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 1000, 500 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதன் நோக்கமே பணமில்லாத பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காகத் தான் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்வாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபோன்ற திசை திருப்பும் வேலைகளை கைவிட்டு, பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளில்  வங்கிகள் மூலம் திரும்பப்பெறப்பட்ட பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு எவ்வளவு?,  கைப்பற்றப்பட்ட கருப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவு? என்ற விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும்
ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY