நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்புவிருந்தினராக சி.எம்.என் சலீம் கலந்துக் கொண்டார். பின்பு அவர் பேசுகையில் நம் முன்னோர்கள் நாட்டிற்கு செய்த நலத்திட்டங்களை பற்றியும், முஸ்லீம் மாணவர்கள் எதிர்காலங்களை தீர்மானிக்கும் படிப்புகள் பற்றியும் சிறப்புரையாற்றினார். மேலும் துபாய் வாழ் தமிழர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு வகுப்புகள் வருகின்ற ஜனவரி 30ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கிரசென்ட் பள்ளியில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஏராளமான அதிரை வாசிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY