கடந்த வாரம் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம். மீண்டும் பழையபடி அனைத்து சர்வதேச நாடுகளுக்குமான ஹஜ் அனுமதி அதிகரிக்கப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து இந்திய ஹஜ் தூதுக்குழுவிற்கும் சவுதி அமைச்சகத்திற்கும் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுவரை அனுமதிக்கப்பட்ட 1,36,020 பேர்களுக்கு பதிலாக மீண்டும் 1,70,025 ஹஜ் யாத்ரீகர்கள் எதிர்வரும் 2017 ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவதற்கான புதிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்த நிகழ்வில் மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, சவுதிக்கான இந்திய தூதர் ஜாவித் அஹ்மது, துணைத் தூதர் நூர் ரஹ்மான் ஷேக் உட்பட பலர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY