இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

டாஸ் வென்ற இந்தியா இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா 48.1-வது ஓவர் முடிவிலேயே 356 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

விராட் கோலி 122 ரன்களும், கேதார் ஜாதவ் 120 ரன்களும் எடுத்தனர். ஒருநாள் போட்டியில் வெற்றிகரமாக இலக்கை எட்டிய போட்டியில் 15வது சதம் அடித்து சச்சினின் சாதனையை விராட்கோலி சமன் செய்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, விராட்கோலி கேப்டனாக இந்திய அணிக்கு பொறுப்பேற்று விளையாடிய முதல் போட்டியிலேயே கடினமான இலக்கை எட்டி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY