ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு தொடர்பாக பாஜக அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் பயிர் கருகியதால் 17 விவசாயிகள் மட்டுமே இறந்ததாக தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் உண்மையில் 150 விவசாயிகள் இறந்ததாக தகவல் வந்துள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இறந்த அனைவரின் குடும்பத்திற்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், கருகிய பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY